Skip to content
Home » பாலியல் குற்றம்…. மனித குலத்திற்கே அவமானம்…. முதல்வர் பேச்சு

பாலியல் குற்றம்…. மனித குலத்திற்கே அவமானம்…. முதல்வர் பேச்சு

  • by Senthil

6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பெற்றோர் அளித்த புகாரில் விருத்தாசலம் 30-வது வார்டு கவுன்சிலர் பக்கிரிசாமி கைது செய்யப்பட்டுள்ளார். பக்கிரிசாமியை திமுகவில் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்பில் இருந்து நிரந்தரமாக நீக்கி துரைமுருகன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்த நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமை பற்றி சட்டசபையில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி பேசுகையில்,  கடலூர், நர்சரி பள்ளியில் 1 வது படிக்கும் குழந்தை வயிற்று வலியால் துடித்தநிலையில் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பள்ளியின் உரிமையாளர் திமுக நகர்மன்ற உறுப்பினரை குழந்தை அடையாளம் காட்டியுள்ளது. பள்ளியில் படிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பில்லாதது, வேதனை அளிக்கிறது. கொடுங்குற்றம் புரிந்தவர் மீது உரிய நடவடிக்கை தேவை என சட்டசபையில் அவர் வலியுறுத்தினார்.

இந்த தீர்மானத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து பேசியதாவது:- சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பக்கிரிசாமி மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டிருக்கிறார். விசாரணை நடத்தி பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். திமுக நகர் மன்ற உறுப்பினர் என தெரியவந்ததும் கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக பெற்றோர் அளித்த புகாரில் போலீசார் துரித நடவடிக்கை எடுத்துள்ளனர். செய்தியை தொலைக்காட்சியில் தான் பார்த்தேன் என நான் சொல்ல விரும்பவில்லை. சம்பவத்தை அறிந்தவுடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்க சொன்னேன். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற செயல்களில் ஈடுபடுவோர்  மனித குலத்திற்கு ஒரு அவமான சின்னம் என கருதுகிறோம். குற்றம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!