சென்னை கலாஷேத்ராவில், பேராசிரியர் உள்பட 4 பேர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் தொடர்பாக இன்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினர். இதற்கு பதில் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
கலாஷேத்ரா மத்திய அரசின் நிறுவனம். பாலிபயல் புகார் தொடர்பாக அங்குள்ள மாணவிகள் 210 பேரிடம் தேசிய மகளிர் ஆணையம் விசாரணை நடத்தியது. ஆனால் யாரும் இதுவரை எழுத்துபூர்வ புகார் அளிக்கவில்லை. ஆனாலும் தமிழக அரசு உரிய விசாரணை நடத்தி வருகிறது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். தவறு உறுதி செய்யப்பட்டார் நடவடிக்கை உறுதி.
இவ்வாறுஅவர் கூறினார்.