Skip to content

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றம்… ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது…

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், பாலியல் குற்றங்களை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து மயிலாடுதுறையில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரகம் முன்பு அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அதிமுகவினர் ஏராளமான கலந்துகொண்டு கண்டனர் கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில்

ஈடுபட்ட 400-க்கு மேற்பட்ட அதிமுகவினரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள் நகரக் கழக நிர்வாகிகள் பேரூர் கழக நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!