மயிலாடுதுறை அருகே உள்ள செம்பனார்கோவில் பழைய திருச்சம்பள்ளியிலிருந்து கடந்த 10ம் தேதி காலை 6 மணிக்கு பிளஸ்டூ படித்துவரும் மாணவி ஒருவர் மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஆரோக்கியராஜ் என்பவருக்கு 1098 மூலம் போன் செய்துள்ளார், சிறுமி தூங்கும்போது அவரது தந்தை பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்துவருகிறார். அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பாக தன்னை காப்பாற்றும்படி கோரியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து ஆரோக்கியராஜ் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மகளிர் போலீசார் அந்த சிறுமியை கடந்த 12ம் தேதி போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டனர், அதில் புகாரில் தெரிவித்தது உண்மை என்றும் பலமுறை இதுபோன்று முயற்சி செய்துள்ளார் என்றும் ஆணித்தரமாக அந்த மாணவி கூறினார்.
உடனடியாக சிறுமியின் தந்தை மீது பெண் போலீசார் போக்சோ வழக்குப் பதிவு செய்துள்ளனர், அந்த சிறுமியை வீட்டிற்கு அனுப்பாமல் நாகப்பட்டினம் குழந்தைகள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர் மகளிர் போலீசார் பழைய திருச்சம்பள்ளிக்குச் சென்று சிறுமியின் தந்தையை விசாரித்தபோது பதறிப்போன அவர், இல்லை என்றும் பொய் என்றும் கூறி குடிபோதையில் போலீசையே திட்டி அனுப்பிளள்ளார்,
அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை செய்ததில் சிறுமியின் தந்தை குறித்து தவறாக யாரும் சொல்லவில்லை, கூலிவேலை பார்ததுவரும் அவர் தனது பிள்ளைகளுக்கு வேண்டியதை கொண்டுவந்து கொடுப்பார் என்றும் பாசமுடன் இருப்பார் என்றும் கூறியுள்ளனர். அந்த சிறுமி அதிக செல்போன்களை பதுக்கி வைத்துக் கொண்டு எப்போதும் பேசிக்கொண்டு இருக்கும் , யாரிடம் பேசுகிறாய் என தந்தை கண்டிப்பார் என்றும் பொதுமக்கள் கூறினர்.
மகளிர் போலீசார் சிறுமியின் தந்தைமீது போக்சோ வழக்குப் பதிவுசெய்ததைக் காட்டாமல் மூன்று முறை அவரை விசாரணைக்கு அழைத்தும் விடாப்பிடியாக அவர் வர மறுத்துவிட்டார்.கடந்த 17ம் தேதி சிறுமியின் தாய் மற்றும் சகோதரி நாகப்பட்டினம் சென்று குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் உள்ள சிறுமியை பார்த்துப் பேசியும் பிடிவாதமாக தந்தைமீது குற்றஞ்சுமத்தியுள்ளார். . 18ம் தேதி காலையில் சிறுமியின் தந்தைமீது போக்சோ வழக்குப் பதிவுசெய்துள்ளதும் அவரை கைதுசெய்ய போலீசார் ஊர்க்காரர்களிடம் சொல்லியுள்ளதைக் கேட்டு சிறுமியின் தந்தை அதிர்ச்சியடைந்தார்.
குடிபோதையில் புலம்பித்திரிந்த அவர் அன்று காலை 9 மணி அளவில் ஊருக்கு அருகில் உள்ள திடலில் குடிபோதையில் சுயநினைவு இல்லாமல் கிடப்பதாக சிறுமியின் தாயாருக்குத் தகவல் கிடைத்துள்ளது, உடனடியாக அவரை கார்மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக் கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அவர் மதுவில் விஷம் கலந்து குடித்துள்ளது அப்போது தெரியவந்தது, சிகிச்சை பெற்றுவந்த நிலையில் ஒரு மணி நேரத்தில் அவர் இறந்துவிட்டார். இதுகுறித்து செம்பனார்கோவில் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தந்தைமீது வைத்த பாலியல் குற்றச் சாட்டு உண்மையா, அல்லது தந்தை கண்டித்ததால் அவரை பழிவாங்க சிறுமி ஆடிய நாடகமா, அவர் யாருடன் அடிக்கடி பேசினார் , அந்த நபர்கள் கொடுத்த ஐடியாவின் படி தான் மாணவி தனது தந்தை மீது பழிபோட்டு உள்ளார். மாணவிக்கு இந்த ஐடியா கொடுத்த நபர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அந்த மாணவிக்கு எப்படி இத்தனை போன்கள் கிடைத்தது என விசாரிக்க வேண்டும் என ஊர் மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர். சிறுமியின் தந்தை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பழையதிருச்சம்பள்ளி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரும், அதிகாரிகளும் அக்கம் பக்கம் விசாரிக்காமல் எடுத்த நடவடிக்கையால் ஒருவர் உயிரிழந்து விட்டார் என ஊர் மக்கள் கூறுகிறார்கள்.