மயிலாடுதுறை அருகே சத்தியவாணன் வாய்க்காலில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக கழிவுநீர் கலந்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் மக்கள் மசோதா கட்சியினர் ஒன்றிணைந்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்:-
மயிலாடுதுறை மாவட்டம் ஆறுபாதியில் உள்ள சத்தியவாணன் வாய்க்கால் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வாய்க்காலாக அமைந்துள்ளது. இதனிடையே மயிலாடுதுறை நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் முறையாக அமைக்கப்படாததால் கழிவு நீரை சுத்திகரிக்காமல் சத்தியவாணன் வாய்க்காலில் மொத்த கழிவுநீரையும் திறந்து விடப்பட்டு துர்நாற்றம் வீசி வாய்க்காலில் சாக்கடை ஆறு போன்று ஓடுகிறது. மேலும் வாய்க்காலில் கழிவு நீர் கலப்பதை தடுக்ககோரி 15 ஆண்டுகளாக
பொதுமக்கள் கோரிக்கை விடுத்த வரும் நிலையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் தரங்கம்பாடி அருகே செம்பனார்கோவில் கடைவீதியில் மக்கள் மசோதா கட்சி , வீரபாண்டிய கட்டபொம்மன் மக்கள் பொதுநல மன்றம் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மன்னம்பந்தல் பகுதியில் இருந்து சத்தியவாணன் வாய்க்காலில் பாதாள சாக்கடை கழிவுநீர் திறந்து விடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். அக்கட்சியின் மாநில தலைவர் மாயா வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், நிறுவனத் தலைவர் ரூபன் மற்றும் 300-க்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதே நிலை நீடித்தால் அப்பகுதி மக்களுக்கு நோய் தொற்று அபாயம் ஏற்பட்டு , நிலத்தடி நீரின் தன்மை மாறுபடும் எனவும் உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்