தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணியில் வகுப்பு 1ன் கீழ் உள்ள இயக்குனர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும், அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் ந. லதா, அரசு தேர்வுகள் இயக்கக இயக்குனராக நியமிக்கப்பட்டார்.
ஆசிரியர் தேர்வு வாரிய(TET) உறுப்பினர் டி உமா, சென்னை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனராக நியமிக்கப்பட்டார்.
தொடக்க கல்வி இயக்குனர் எஸ். சேதுராம வர்மா, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினராக மாற்றப்பட்டார்.