நெல்லை மாவட்டம்,ராதாபுரம் பகுதியைச் சேர்ந்த பழனி என்பவர் டாடா டியாகோ கார் ஒன்றை வைத்துள்ளார். கடந்த சில நாட்களாக கார் அவ்வப்போது பழுதடைந்து வந்ததால், காரை சர்வீஸ் சென்டரில் விட அவர் முடிவு செய்தார். இதன்படி தெற்கு வள்ளியூரில் உள்ள டெரிக் டாட்டா கார் ஷோரூமிற்கு அந்த காரை எடுத்து வந்து அவர் விட்டுள்ளார். வழக்கம்போல் ஊழியர்கள் சர்வீஸ் செய்வதற்காக கார் பானெட்டை திறந்த போது, உள்ளே மிகப்பெரிய பாம்பு ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மீட்கப்பட்ட மலைப்பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைப்பு