Skip to content

செப்.17ல்…….இலங்கை அதிபர் தேர்தல்

  • by Authour

இலங்கையில் 2019ல் நடந்த தேர்தலில் கோத்தபய ராஜபக்சே, வெற்றி பெற்று அதிபராக பதவியேற்றார். பொருளாதார நெருக்கடியால் 2022-ல் ராஜபக்சே பதவி விலகினார். 2022-ல் பொருளாதார நெருக்கடி நிலையில் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கவும், பிரதமராக குணவர்த்தனவும் பதவியேற்றனர்.

இலங்கையில் தற்போதைய அதிபர் பதவிக்காலம் நவம்பர் 17-ம் தேதியுடன் முடிவு பெறுவதை ஒட்டி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 21-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இலங்கை அதிபர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அதிபர் ரணில் விக்ரம சிங்கே மீண்டும் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக ஏற்கெனவே அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!