சென்னை, சேப்பாக்கம் ஆளுநர் மாளிகையில் உதயிநிதி ஸ்டாலின் நாளை அமைச்சராக பதவியேற்கிறார். இந்நிலையில் தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி டிவிட்டரில் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். டிவிட்டரில் கூறியதாவது…. சேப்பாக்கத்தின் தென்றல் இனி செந்தமிழ் நாடெங்கும் வீசட்டும்; புது சாதனைகளை, நூறாண்டுகள் வரலாறு பேசட்டும்; இளைஞர்களின் நம்பிக்கை, எதிர்கால தமிழ்நாட்டின் விடிவெள்ளி, அமைச்சராக பதவி ஏற்கும் கழக இளைஞரணிச் செயலாளர் உதயிநிதி ஸ்டாலினுக்கு நெஞ்சம் நெகிழும் வாழ்த்துகள் என இவ்வாறு தெரிவித்துள்ளார்.