அரியலூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து எதிர்வரும் 06.03.2024 அன்று காலை/மா 10.00 மணிமுதல் 1.30 மணிவரை செந்துறை பேருந்து நிலையம் அருகில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இம் முகாமில் மருத்துவத்துறை, ஊரகவளர்ச்சிதுறை, வருவாய் துறை. வேலைவாய்ப்புதுரை மத்திய கூட்டுறவு வங்கி, மாவட்ட தொழில் மையம், ஆவின், ஊரக வாழ் வாதார இயக்கம், முதலமைச்சரின் விரிவான காப்பீடுதிட்டம், நாட்கோ, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, முன்னோடி வங்கி மற்றும் பளிவி கல்வித்துறை ஆகிய துறைகளை ஒருங்கிணைத்து நடைபெற உள்ளது. இம்முகாமில் இது நாள் வரை அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளி நபர்கள் மட்டும் ஆதரர் அட்டைநகல், குடும்பஅட்டை நகல், பாஸ்போர்ட்சைஸ் போட்டோ5 ஆகிய ஆவணங்களுடன் நேரில் கலந்து கொண்டு பயன் பெறுமாறும். மற்றும் UDID அட்டை பெறாதவர்கள் விண்ணப்பம் செய்திடு மாறும் உதவி உபகரணங்கள் வங்கிகடன் மற்றும் இதரதுறை சார்ந்த நலத்திட்ட உதவிகள் தேவைபடுவோர், தமிழ்நாடு உரிமைகள் திட்டம் தொடர்பான மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பில் பதிவு செய்யாதவர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம் என அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜே.ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.