அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள பொய்யாத நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் அய்யாக்கண்ணு. இவருடைய மகன் வேல்முருகன் (13). இவர் அங்குள்ள அரசு பள் ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று தலை வலி பள்ளிக்கு செல்ல வில்லை. இந்தநிலையில் ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க பிலாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த அமல்ராஜ் என்பவரின் மோட்டார் சைக்கிளில் லிப்ட் கேட்டு செந்துறை நோக்கி சென்றுள் ளார்.
ராயம்புரம் செல்லும் வழியில் சாலையில் மக்காச்சோளம் காய வைத்திருந்த நிலையில் சோளத்தில் ஏறிய மோட்டார் சைக்கிள் கீழே கவிழ்ந்தது. அப்போது பின்னால் வந்த லாரி மோதியதில் தலையில் பலத்த காயம் அடைந்த வேல்முருகனை அப்பகுதி மக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வேல்முருகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த அமல்ராஜ் செந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமாக லாரியை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
