அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பொன்குடிகாடு கிராமத்தை சேர்ந்த சின்னப்பிள்ளை( 70). உங்கள் குடும்பத்தில் செய்வினை செய்து இருக்கிறார்கள் ஆகையால் கழுத்தில் உள்ள தாலி செயினை கழட்டி கொடுத்தால் பூஜை செய்து உங்கள் மீது உள்ள செய்வினை நீக்குவிடுவேன் என ஒரு மர்ம நபர் பேசியுள்ளார். அதற்க்கு முதலில் மூதாட்டி சின்னபிள்ளை வீட்டில் இருந்த கவரிங் நகையை கொடுத்துள்ளார். சுதாரித்து கொண்ட மர்மநபர் தாங்கள் அணிந்திருக்கும் நகையை கொடுத்தால் தான் மாந்திரீகம் செய்து செய்விணையை எடுக்க முடியும் என கூறியுள்ளார். இதனால் சின்னபிள்ளை தனது தாலி செயினை கழட்டி கொடுத்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் பூஜை செய்தால் பலிக்காது ஆகையால் கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் பூஜை செய்து வந்த பிறகு தான் வீட்டில் பூஜை செய்ய வேண்டும் என கூறிய மர்ம நபர் செயினை எடுத்து தப்பி சென்று விட்டார். இந்த நிலையில் 5 சவரன் தாலி செயினை எடுத்து சென்ற நபர் பிள்ளையார் கோவிலில் இல்லாததால் தான் ஏமாற்றப்பட்டோம் என மூதாட்டி அறிந்த நிலையில் செந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
![](https://www.etamilnews.com/wp-content/uploads/2024/04/அரியலூர்-மூதாட்டி-1-930x620.jpg)