ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் ஓபிஎஸ் அணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வாபஸ் பெறப்பட்ட செந்தில்முருகனை நீக்குவதாக இன்று காைல ஓபிஎஸ் அறிவித்துள்ளார். கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் செந்தில்முருகனை நீக்குவதாக வும், கழக உடன் பிறப்புகள் யாரும் அவருடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனவும் கூறி இருந்தார்.
இந்தநிலையில் ஓபிஎஸ் அணியிலிருந்து நீக்கப்பட்ட செந்தில்முருகன் இன்று சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்திற்கு சென்று . எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் . அப்போது செங்கோட்டையன் உள்பட அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.