முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் அமலாக்கத்துறை தொடர்ந்து வாய்தா கேட்டு இழுத்தடித்து வருகிறது. இன்று ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. ஜாமீன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்றும் அமலாக்கத்துறை சார்பில், வழக்கு விசாரணையை ஒத்திவைக்கும்படி கோரிக்கை வைத்ததால் அதை ஏற்ற உச்சநீதிமன்றம் வரும் 22ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தது.
