அமலாக்கத்தறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது ஏப்ரல் 30ம் தேதி உத்தரவு என சென்னை அமர்வு நீதிமன்றம் அறிவிப்பு வௌியிட்டுள்ளது. செந்தில்பாலாஜி தரப்பு கோரிக்கையை ஏற்று மீண்டும் வாதங்களை முன்வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. காசோலை, செலான் உள்ளிட்ட வங்கி ஆவணங்களில் தேதி, மாதம் உள்ளிட்டவைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளன என செந்தில்பாலாஜி தரப்பு தெரிவித்துள்ளது. ஆவணத்தின் உண்மைதன்மையை உறுதி செய்ய நிபுணர் குழுவின் ஆய்வுக்கோ, தடயவியல் சோதனைக்கோ உட்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.