அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் ஜாமீன் கோரி சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் 3வது முறையாக மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது அமலாக்கத்துறை 8ம் தேதி பதில் அளிக்கும்படி உத்தரவிடப்பட்டிருந்தது. நேற்று அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்யாமல் காலதாமதம் செய்தது. இதனால் அமலாக்கத்துறைக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்த மனுவில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்ககூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் வழக்கு விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்த நீதிபதி அல்லி, இன்று ஜாமீன் மனு மீதான தீர்ப்பு வரும் 12ம் தேதி வழங்கப்படும் என கூறினார்.