அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி 2-வது முறையாக ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்த வழக்கில் கடந்த வாரம் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்தது. இதையடுத்து, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், செந்தில்பாலாஜி ஜாமீன் வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
முன்னதாக அமலாக்கத்துறை சார்பில் இந்த வழக்கை வி்ரைந்து முடிக்க உத்தரவிடவேண்டும் என கேட்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி 3 மாதத்தில் வழக்கை முடிக்க வேண்டும். தினசரி வழக்கை விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.