மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடாதிபதியான 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தொடர்பான ஆபாச ஆடியோ, வீடியோ இருப்பதாகக் கூறி பணம் கேட்டு மிரட்டியதாக கடந்த பிப்ரவரி மாதம் மயிலாடுதுறை போலீஸார் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து பாஜகவின் மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் அகோரம், ஆடுதுறை வினோத், விக்னேஷ், கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, ஸ்ரீநிவாஸ், ஆகிய 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் 90 நாட்கள் சிறையில் இருந்த நிலையில் ஜாமினில் வெளியே வந்தனர்.
இந்த நிலையில் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மேலும் நான்கு பேரை போலீசார் தேடி வந்தனர். தலைமறைவாக உள்ள இரண்டாவது நபராக இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தருமபுர ஆதீனத்தின் நேர்முக உதவியாளர் திருவையாறு செந்தில் 4 மாதங்களாக தேடப்பட்டு வந்த நிலையில் உத்திரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் இருப்பதாக மயிலாடுதுறை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து மயிலாடுதுறை சிறப்பு தனிப்படை போலீசார் வாரணாசிக்கு சென்று செந்திலை கைது செய்தனர். அவரை விமானம் மூலம் தனிப்படை போலீசார் சென்னைக்கு அழைத்து வருகிறார்கள்.
மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் முதல் முறையாக முன்ஜாமீன் கேட்டு மனு. தாக்கல் செய்திருந்தார். . இதில் அரசு தரப்பு வழக்கறிஞர் ராமசேயோன் , செந்திலை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என வாதிட்டதால் முன் ஜாமின் மனுவை தலைமை குற்றவியல் நீதிபதி மாயகிருஷ்ணன் தள்ளுபடி செய்தார்.