சென்னையில் இன்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு முழுவதும் மின் தேவை கடந்த 2 ஆண்டுகளில் மிக அதிகமாகியுள்ளது.2020 – 21 ல் மின் நுகர்வு 16,481 மெகாவாட் .ஏப்ரல், மே மாதத்தில் மட்டும் 19,387 மெகாவாட் ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கடந்த 2 நாட்களாக ஒரு சில பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. சென்னையில் தேவைக்கு ஏற்ப புதிய மின்மாற்றிகள் 13 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன .
மின்சாரத்துறையின் கட்டமைப்புகளை மேம்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் வரும் காலங்களில் எந்தவித தடையுமின்றி மின்விநோயோகம் செய்ய ஏற்பாடு செய்துள்ளோம். திறன் மேம்படுத்த புதிய கேபிள்கள் அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சீரான மின்விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.