திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் எழிலரசி தேசிய கொடி ஏற்றி சிறப்புரையாற்றி தொடங்கி வைத்தார்.தமிழ் ஆசிரியை விக்டோரியா வரவேற்றார். மக்கள் சக்தி இயக்க மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோ, வாழ்த்தி பேசினார்.
மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம் தலைமையில்
2023-24-ம் கல்வி ஆண்டில் IO-ம் வகுப்பு பொதுத் தேர்வில் செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி அளவில் சி. தீபக்கணேஷ் முதல் மதிப்பெண்(480/500)பெற்றவருக்கு 5000/- ஊக்கத்தொகை, பள்ளியில் இரண்டாம் இடம் பெற்ற (460/500) மாணவர் . செ. ஜெய் ரிசிகேஷ் 3000/-, ஊக்கத்தொகை, மூன்றாம் இடம் பெற்ற (426/500) அ. முகமது அசார் மாணவருக்கு 2000/- ஊக்கத்தொகையுடன், மேலும் பாடம் வாரியாக பள்ளியில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு 500/- விதமாக ஊக்கத் தொகை வழங்கி , அனைத்து மாணவருக்கும் பொன்னாடை போர்த்தி,பாராட்டு சான்றிதழ், திருக்குறள் மற்றும் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி நூல்கள் வழங்கி சிறப்பத்தார்.
இதில் மக்கள் சக்தி இயக்க நிர்வாகிகள் ஆர். இளங்கோ ஆர்.கே.ராஜா, ஆர்.வாசுதேவன், ஏ.லியாசத்தின்ஷரீப், விக்னேஷ், வெ.ரா.சந்திரசேகர் ஆகிய மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி சிறப்பித்தனர்.
பள்ளி மாணவர்கள் உடற்பயிற்சி, நடனம், நாடகம் மற்றும் சுதந்திர தின சிறப்பு உரையாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் சிறந்த மாணவர்களுக்கு நினைவு பரிசு, ஊக்கத்தொகை வழங்கி சிறப்பித்தார்கள்.
நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பள்ளி முன்னாள் மாணவர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர்கள்.முடிவில் ஆசிரியைமேகலா நன்றி கூறினார்.