Skip to content
Home » சென்சார் போர்டு லஞ்சம் கேட்கிறது…. ஆதாரத்தை வௌியிட்ட விஷால் …வீடியோ….

சென்சார் போர்டு லஞ்சம் கேட்கிறது…. ஆதாரத்தை வௌியிட்ட விஷால் …வீடியோ….

  • by Authour

நடிகர் விஷால் நடிப்பில் கடந்த 15ஆம் தேதி  வெளியான படம் ‘மார்க் ஆண்டனி’. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டையாடி வரும் நிலையில், நடிகர் விஷால் சென்சார் போர்டு ‘மார்க் ஆண்டனி’ படத்திற்கு லஞ்சமாக ரூ.6.5 லட்சம் கேட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மார்க் ஆண்டனி படத்தின் இந்தி டப்பிங்கிற்காக மும்பை சென்சார் போர்டு அதிகாரிகள் தன்னிடம் ரூ.6.5 லட்சம் லஞ்சமாக கேட்டதாக கூறி பணம் செலுத்திய வங்கி விவரங்களை வெளியிட்டுள்ளார் நடிகர் விஷால். இது

குறித்து அவரது எக்ஸ் தளத்தில் “ வெள்ளித்திரையில் லஞ்சம் குறித்து காட்டுவது பரவாயில்லை, ஆனால் நிஜ வாழ்கையில் அது சிறந்ததல்ல, மும்பை சென்சார் போர்டில் மோசமாக நடக்கிறது. மார்க் ஆண்டனி படத்திற்காக படத்தை திரையிட ரூ.3 லட்சமும், சான்றிதழ் பெற ரூ.3.5 லட்சமும் லஞ்சமாக கேட்டனர். இதனை மகாராஷ்டிரா முதலவர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். நான் உழைத்த பணம் ஊழலுக்கு செல்வதா?, எப்போதும் போல உண்மை வெல்லும்” என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *