வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் சென்னை செனாய் நகரில் ரூ.131 கோடியே 27 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 240 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கே.கே நகரில் ரூ.51 கோடியே 29 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 120 அடுக்குமாடி குடியிருப்புகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை திறந்துவைத்தார்.
இதுபோல, தமிழ்நாடு அரசு அலுவலர் வாடகை குடியிருப்பு திட்டத்தின் கீழ் திருச்சி செங்குளத்தில் ரூ.116 கோடியே 55 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 464 தமிழ்நாடு அரசு அலுவலர் வாடகை குடியிருப்புகளையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று காணொளி வாயிலாக திறந்துவைத்தார்.
விழாவில், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான நிர்வாகத்திலுள்ள 88 கோவில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்கான உயர்த்தப்பட்ட அரசு மானியம் ரூ.6 கோடிக்கான காசோலையை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சி.பாபாஜி ராஜா பான்ஸ்லேவிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.