அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடிக்கு எதிராக மூத்த நிர்வாகி செங்கோட்டயன் போர்க்கொடி தூக்கி உள்ள நிலையில் இன்று ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையன் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது கூட்டத்தில் இருந்த அந்தியூர் பகுதி நிர்வாகி ஒருவர், ஏன் அந்தியூர் நிர்வாகிகளை மட்டும் கூட்டத்துக்கு அழைப்பது இல்லை என எழுந்து கேட்டார். மேடையில் இருந்த செங்கோட்டையன், அந்த நிர்வாகியை மேடைக்கு அழைத்து என்ன என கேட்டார்.
செங்கோட்டையனிடம் அவர் தனது மனக்குமுறலை கொட்டினார். அப்போது செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் அவரை மேடையில் இருந்து கீழே தள்ளி தாக்கினர். இதனால் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேடையில் இருந்து தள்ளப்பட்டவர் எடப்பாடியின் ஆதரவாளர் என கூறப்படுகிறது.