Skip to content

ஜெயலலிதா பிறந்தநாள் விழா- செங்கோட்டையன் புறக்கணிப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாளையொட்டி, அவரின் சிலைக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில்  அவைத்தலைவர்  தமிழ் மகன் உசேன், கட்சி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் பங்கேற்றனர்.

ஆனால் அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான  செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.   அவர்  கோபி செட்டிபாளையத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் நிகழ்ச்சியில் செங்கோட்டையன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

சென்னை தலைமையகத்தில் நடைபெறும் விழாவில் ஏன் பங்கேற்கவில்லை என பத்திரிகையாளர்கள் கேட்டனர்.அதற்கு பதிலளித்த செங்கோட்டையன், “நினைவு நாளாக இருந்திருந்தால் நான் சென்னை சென்று இருப்பேன். பிறந்த நாள் என்பதால் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில்  பங்கேற்று வருகிறேன். இந்த நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியால் பொதுமக்கள் பயன்பெறுவார்கள். இதன் மூலம் 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வர உதயவியாக இருக்கும் என்றார்.

சென்னை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு உயர்கல்வி மன்ற வாரியம் வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.  இதில் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ.,  முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

 

error: Content is protected !!