Skip to content

துணை முதல்வர் உதயநிதிக்கு திருச்சியில் வரவேற்பு…. சீனியர் மிஸ்ஸிங்

  • by Authour

திருச்சி மாவட்டம் மணப்பாறை சிப்காட் வளாகத்தில்  இன்று  சாரண சாரணிய இயக்க  பெருந்திரளி( ஜாம்போரி) இன்று மாலை தொடங்கியது.  இந்த பெருந்திரளி என்பது 4 வருடங்களுக்கு ஒரு முறை இந்தியாவின் ஒரு பகுதியில் நடத்தப்படும்.

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி இந்த ஆண்டு தமிழகம் இதனை நடத்துகிறது. அத்துடன்  சாரண இயக்கத்துக்கு இது வைரவிழா ஆண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.

இத்தனை சிறப்புகளுடன் நடைபெறும்  சாரணர் பெருந்திரளணியில் இந்தியா முழுவதும் இருந்து பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுமார் 25ஆயிரம் சாரண, சாரணியர்  மற்றும்  அலுவலர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்களுக்காக 2 ஆயிரத்து  422 கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.  350க்கும் மேற்பட்ட கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 50க்கும் மேற்பட்ட  கடைகளுடன் ஒரு மினி மார்க்கெட் உருவாக்கப்பட்டு உள்ளது. தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

25 படுக்கை வசதிகளுடன் கூடிய 2  மருத்துவமனைகள் அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 15 ஆம்புலன்ஸ்கள், 15 நடமாடும் மருத்துவ வாகனங்கள் என  சிறப்பானஏற்பாடுகளுடன் ஒரு

 

புதிய  நகரமே வடிவமைக்கப்பட்டு உள்ளது.

தமிழக சாரண இயக்கத் தலைவரான பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ் தலைமையில் கலெக்டர் பிரதீப் குமார் மேற்பார்வையில்   ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. 2ம் தேதி இதன்  நிறைவு விழா நடக்கிறது. இதில்  தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

7 நாட்கள் நடைபெறும் இந்த ஜாம்போரியின் தொடக்க விழாவில்  துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு  தொடங்கி வைத்தார்.  இதற்காக இன்று மதியம் உதயநிதி சென்னையில் இருந்து  விமானம் மூலம் திருச்சி வந்தார்.

விமான நிலையத்தில் துணை முதல்வர் உதயநிதியை வரவேற்க  உள்ளூர் அமைச்சர், மூத்த அமைச்சர், திமுகவின்  முதன்மை செயலாளரான கே . என். நேரு வரவில்லை.   அமைச்சர் மகேஸ், கலெக்டர் பிரதீப் குமார்,  எம்.பிக்கள் துரை வைகோ,  அருண் நேரு  உள்ளிட்டவர்கள்  துணை முதல்வரை வரவேற்றனர்.

மூத்த அமைச்சர் நேரு, துணை முதல்வர் உதயநிதியை வரவேற்க விமான நிலையம் வரவில்லை. அவர் நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் என்பதால் அங்கு   நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!