ஆந்திர மாநிலம் ஸ்ரீகா குளம் மாவட்டத்தை சேர்ந்தவர் அப்பல்லோ நாயுடு. இவரது மகன் சந்தோஷ் (28). இவர் தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் தங்கி சாலை அமைக்கும் பணியில் மெஷின் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் சந்தோஷ் தனது பைக்கில் செங்கிப்பட்டி கடைத் தெருவிற்கு டீ குடிக்க வந்து கொண்டிருந்தார்.
அப்போது எதிரே செங்கிப்பட்டியிலிருந்து புதுக்கோட்டை நோக்கி பாலசுப்பிரமணியன் என்பவர் ஓட்டி சென்ற லாரி பைக் மீது மோதியது. இதில் சந்தோஷ் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தகவலறிந்த செங்கிப்பட்டி போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று சந்தோஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து செங்கிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.