தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே புதுக்குடி பஸ்ஸ்டார் எதிரில் சாலையின் சென்டர் மீடியனில் பைக் மோதியதில் சம்பவ இடத்திலேயே இளம் பெண் பலியானார்.
கரூர் பெரியசாமி நகரை சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணன். இவரது மகன் மணிகண்டன் (23). இவர் தனது தோழி பார்கவி (23) என்பவருடன் தஞ்சைக்கு பைக்கில் வந்தார்.
பின்னர் ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். அப்போது தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே புதுக்குடி பஸ் ஸ்டாப் எதிரில் பைக் நிலைத்தடுமாறி சாலை சென்டர் மீடியனில் மோதியது. இதில் பின்புறம் அமர்ந்திருந்த பார்கவி சாலையில் விழுந்து தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். மணிகண்டனுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டது.
தகவலறிந்த செங்கிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்கவி உடலை மீட்டு பூதலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்த மணிகண்டன் துவாக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
இதுகுறித்து செங்கிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.