பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியை சேர்ந்த இளம் பெண் சுமதி (21) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கரூர் வைஸ்யா வங்கியில் டெலிகாலராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு, காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் காவல் நிலையத்துக்கு வந்த அனுசுயா, தன்னை 4 பேர் காரில் கடத்தி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரளித்தார். இதனால், அதிர்ச்சியடைந்த காவல் துறையினர் உடனடியாக விசாரணையை தொடங்கினர். அந்த புகாரில் சுமதி .. சக தோழியை சந்திப்பதற்காக, சைதாப்பேட்டையில் இருந்து செங்கல்பட்டு ரயில் நிலையத்துக்கு வந்து காத்திருந்தேன். அப்போது, வெளியே நின்றிருந்த நான்கு இளைஞர்கள் என்னிடம் பேச்சு கொடுத்து காரில் ஏற்றி கடத்தினர். பின்னர், சாலவாக்கம் காவல் எல்லைக்கு உட்பட்ட வனப்பகுதிக்கு கொண்டு சென்று கூட்டு பலாத்காரம் செய்தனர் என புகாரில் தெரிவித்திருந்தார். இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார் இளம்பெண்ணை செங்கல்பட்டு மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக உட்படுத்தினர். இதனைத் தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த மலையாங்குளம் பகுதியை சேர்ந்த சலீம் என்பவரை இளம்பெண் கலா 3 மாத காலமாக காதலித்து வந்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக சலீம் அழைத்ததின்பேரில், செங்கல்பட்டு ரயில் நிலையத்துக்கு வந்துள்ளார். ரயில் நிலையம் அருகே காத்திருந்த சலீமுடன் பைக்கில் மலையாங்குளம் வீட்டுக்கு கலா சென்றுள்ளார். இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். கலா திருமணம் செய்ய கோரியபோது சலீம் மறுத்துள்ளார். இதனையடுத்து, சலீமை சிக்க வைக்க, தன்னை கூட்டு பலாத்காரம் செய்ததாக கலா நாடகமாடியது காவல் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
