அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து சசிகலா சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை ரத்து செய்யக்கோரி தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆதரவாளர் செம்மலை ஐகோர்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மேல்முறையீடு மனுவுக்கான உரிய நீதிமன்ற கட்டணத்தை செலுத்தாத சசிகலா மனுவை தள்ளுபடி செய்யக்கோரி மனுதாரர் செம்மலை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதி, சசிகலாவுக்கு எதிராக செம்மலை தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.