Skip to content
Home » செல்வராசு எம்.பி. இறுதிச்சடங்கு….. சொந்த ஊரில் நாளை நடக்கிறது

செல்வராசு எம்.பி. இறுதிச்சடங்கு….. சொந்த ஊரில் நாளை நடக்கிறது

நாகை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்பி.  செல்வராஜ் இன்று அதிகாலை சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் இறந்தார்.  அவரது இறுதிச்சடங்கு நாளை நடக்கிறது.

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியம், கப்பலுடையான் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராசு (67). திருவாரூர் திரு.வி.க. அரசு கலை கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்.  இவரது மனைவி பெயர் கமலவதனம். இவர்களுக்கு செல்வப்பிரியா, தர்ஷினி ஆகிய இரு மகள்கள் உள்ளனர். செல்வராஜ்   சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு அதன் காரணமாக மாற்று சிறுநீரகம் பொருத்திக்கொள்ளும் சிகிச்சை பெற்றுள்ளார்.  இதற்காக  அவர் சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இன்று அதிகாலை சுமார் 2.40 மணி அளவில் திடீரென காலமானார். இந்த செய்தி அவரது குடும்பத்தினர்கள், உறவினர்கள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினரை அதிா்ச்சியில் ஆழ்த்தியது.  சென்னையில் இருந்து இன்று காலை உடல் ஆம்புலன்ஸ் மூலம்   திருவாரூர் மாவட்டம் சித்தமல்லிக்கு  புறப்பட்டது. மதியம் உடல் சித்தமல்லி வந்தடைந்தது.

சித்தமல்லி கிராமத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் இறுதிச்சடங்குகள் நடைபெறுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!