Skip to content

ரவுடி பட்டியலில் எனது பெயரா?.. அண்ணாமலைக்கு செல்வபெருந்தகை சவால்

சென்னையில் இன்று நிருபர்களிடம் காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது: அண்ணாமலை என்ன ஐ.பி.எஸ்., படிச்சாரு, என்ன சட்டம் படிச்சாரு. அண்ணாமலை ஐ.பி.எஸ்., படித்தாரா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். நான் ரவுடி என்பதற்கு ஆதாரத்தை அண்ணாமலையால் காட்ட முடியுமா?. தலித் சமூகத்தை சேர்ந்த என்னை பற்றி அவதூறு பரப்பினால் சிறை செல்ல நேரிடும். இந்த நாடும், சட்டமும், நீதிமன்றமும், போலீசாரும் அண்ணாமலைக்கு சொந்தம் என நினைக்கிறார். நான் வழக்கு தொடர்ந்தால் அண்ணாமலைக்கு முன் ஜாமின் கிடைக்குமா?.  ஆணவமும், திமிரும் அண்ணாமலைக்கு எங்கே இருந்து வந்தது. தலித் சமூகம் மற்றும் ஏழை, எளிய மக்கள் என்றால் அண்ணாமலைக்கு யாரு என்று தெரியாது. தமிழக பா.ஜ.,வில் உள்ளவர்கள் மீது மொத்தம் 834 வழக்குகள் உள்ளது. இதில் 124 குற்ற வழக்குகள். ஆம்ஸ்ட்ராங் கொலையை உலகம் முழுவதும் கொண்டு செல்வேன் என அண்ணாமலை சொல்கிறார். துக்கம் விசாரிக்க சென்ற இடத்தில் அரசியல் பேசும் அண்ணாமலைக்கு நாகரீகம் இருக்கிறதா?. வாய் இருக்கிறது என்பதற்காக அவதூறாக பேசினால், சட்டம் பாயும் என அண்ணாமலைக்கு தெரியாதா?. அரைகுறையாக அரசியல் படித்துவிட்டு பேசும் அண்ணாமலை என்ன பேசுகிறோம் என யோசித்து பேச வேண்டும். பா.ஜ., ஊழலிலேயே திளைத்து, நிதி நிறுவனங்களை அவர்களுக்கு வேண்டிய ஆட்கள் மூலம் தங்கள் வசம் பயன்படுத்திக் கொள்வது, ஆசை வார்த்தை காட்டி ஏழை எளிய கிராமப்புற மக்களை ஏமாற்றுபவர்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!