தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவராக பதவி வகித்து வந்தவர் எம்.பி.ரஞ்சன்குமார். இவர் தமிழக காங்கிரஸ் எஸ்சி, எஸ்டி துறை தலைவர் பதவியும் வகித்து வந்தார். இரு பதவிகளை வகித்து வரும் இவர், நாடாளுமன்ற தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் வேட்பாளராக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ரஞ்சன் குமாரை மாவட்ட தலைவர் பதவியில் இருந்து விடுவித்து செல்வபெருந்தகை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.