Skip to content
Home » எந்த வாக்குறுதியும் நிறைவேற்றாத கட்சி பாஜக…. செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

எந்த வாக்குறுதியும் நிறைவேற்றாத கட்சி பாஜக…. செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

  • by Senthil

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவனை ஆதரித்து  ஜெயங்கொண்டத்தில், தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
இங்கு மூன்று அணிகள் தேர்தலில் நிற்கின்றன இந்தியா கூட்டணி ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக தேர்தலில் நிற்கிறது இந்தியா கூட்டணியின் வேட்பாளராக திருமாவளவன் இருக்கிறார் . பிரதமர் மோடி 10 ஆண்டுகளுக்கு முன்பு என்னென்ன வாக்குறுதிகளை கொடுத்தார் 5 ஆண்டுகளுக்கு முன்பு என்னென்ன வாக்குறுதிகளை கொடுத்தார் எதையாவது நிறைவேற்றி இருக்கிறாரா
தமிழகத்துக்கு மோடி செய்த துரோகம் கொஞ்ச நஞ்சமல்லா மோடி துரோகம் செய்தார் என்றால் அவர்களுக்கு உறுதுணையாக நின்ற கட்சி அதிமுக. மாநிலத்தின் பல உரிமைகளை பறித்தது பாஜக மோடி அரசு. அதற்கு துணையாக இருந்தவர் எடப்பாடி பழனிச்சாமி இவர்கள் இருவரும் தான் வாக்கு கேட்க வருகிறார்கள்

2014 ல் பிப்ரவரி 7ம் தேதி திருச்சியில் பேசுகிறார் மோடி எனக்கு ஆறு மாதம் கொடுங்கள் ஆட்சியில் அமர்த்தவுடன் ஒவ்வொரு வாக்காளர் வங்கி கணக்குகளிலும் 15 லட்சம் ரூபாய் நான் போடுகிறேன் என்று கூறினார். இதை நம்பிய மக்கள் வங்கிகளில் கணக்கு துவங்கி வங்கி மேலாளரிடம் பொதுமக்கள் 15 லட்சம் பணம் வந்ததா என்று கேட்க தொடங்கினார்கள். வங்கி கணக்கு துவங்குவதற்காக வங்கிகளில் போடப்பட்ட தொகையும் குறைந்தபட்ச இருப்பு இல்லை என மோடி அரசு 25 ஆயிரம் கோடி ரூபாயை கொள்ளையடித்தது .இப்படிப்பட்ட துரோகங்களுக்கு துணை போனவர்கள் அதிமுகவினர். காங்கிரஸ் கட்சி வன்னியர்கள் தலித்துகள் உள்ளிட்ட எந்த ஜாதியினரையும் விட்டுக் கொடுக்காதது காங்கிரஸ் பேரியக்கம். எல்லோருக்குமான சமூக நீதி எல்லோருக்கமான இட ஒதுக்கீடு என்பது காங்கிரஸ் கட்சியின் நோக்கம். சமூக நீதிக்கும் சாதிவாரி கணக்கெடுப்புக்கும் தடையாக இருக்கும் பாஜகவோடு கூட்டணி சேர்ந்ததன் மூலம் பாமக துரோகம் இழைத்துவிட்டது

கடந்த 10ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியில் இருந்த பெட்ரோல் டீசல் காஸ் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தற்போது பெருமளவில் விலை உயர்ந்துள்ளதால் பொருளாதாரம் மிகவும் சீரழித்து விட்டது. இது நியாயமா இந்திய பொருளாதாரம் மிகவும் நொறுங்கிப் போய் இருக்கிறது மோடிக்கு வாய்ப்பு கொடுங்கள் அமெரிக்காவுக்கு நிகரான பொருளாதாரமாக மாற்றி தருகிறேன் என்று மோடி வாக்குறுதி அளித்தார் ஆனால் இன்றைய நிலைமை என்ன இந்தியர் ஒவ்வொருவர் தலைமீதும் ஒரு லட்சத்தி ஐம்பதாயிரம் ரூபாய் கடன் வைக்கப்பட்டுள்ளது

மு க ஸ்டாலின் சொன்னதையும் நிறைவேற்றி இருக்கிறார் சொல்லாததையும் நிறைவேற்றி இருக்கிறார். மோடி வாக்குறுதிகளை தமாஷாக கூறியதாக கூறுகிறார் ஆனால் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சொன்னதையும் செய்தார் சொல்லாததையும் செய்தார் எனர் கூறிய செல்வப் பெருந்தகை தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்திய பல்வேறு திட்டங்களை பட்டியலிட்டார்

7000 கோடி ரூபாயை தேர்தல் பத்திரங்களை மிரட்டி வாங்கி இருக்கிறீர்கள். சிபிஐ அமலாக்கத்துறை வருமானவரித்துறை ஆகியவற்றை கொண்டு மிரட்டி 7000 கோடி ரூபாயை நன்கொடையாக மோடி பெற்றுள்ளார்

ஒரு ஆட்சி எப்படி இருக்க கூடாதோ அப்படிப்பட்ட ஆட்சியை மோடி நடத்தி வருகிறார். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ஏற்கனவே பல லட்சம் கோடி ஊழல் செய்யப்பட்டுள்ளது. அதனை விரிவுபடுத்தப் போவதாக அறிவித்துள்ளார்

இந்திய தேசிய காங்கிரஸ் கடந்த வாரம்  தேர்தல் அறிக்கை  வெளியிட்டது.  நம்முடைய பெண்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் மஹாலக்ஷ்மி திட்டம் மூலம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்கள். ஏற்கனவே தமிழக முதல்வர் வருடத்திற்கு பன்னிரண்டாயிரம் வழங்கி வருகிறார். இப்போது காங்கிரஸ் அறிவித்துள்ள ஒரு லட்சமும் சேர்த்து ஒரு லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் கிடைக்க இருக்கிறது

படித்து வேலையில்லா பட்டதாரிகளுக்கு அப்ரண்டீஸ் பயிற்சி கொடுத்து வருடத்திற்கு ஒரு லட்சம் தர இருப்பதாக கூறியிருக்கிறார் மகளிருக்கான திட்டம் இளைஞர்களுக்கான திட்டம் தொழிலாளர்களுக்கான திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் செயல்படுத்தப்பட உள்ளது காங்கிரஸ் சொன்ன வாக்குறுதிகளை நேரு காலத்தில் இருந்து நிறைவேற்றி இருக்கிறோம். எனவே ஐந்து லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் இந்த சிதம்பரம் தொகுதியில் நமது வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என கேட்டுக் கொண்டார்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!