தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும்வேட்புமனு தாக்கல் நேற்று மாலை முடிவடைந்தது. இன்று அனைத்து தொகுதிகளிலும் வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடந்தது. அதன்படி இன்று காலை திருச்சி மக்களைவ தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி கலெக்டர் பிரதீப் குமார் வேட்புமனு மக்கள் பரிசீலைன தொடங்கினார். இதற்காக வேட்புமனு தாக்கல் செய்த சுயேச்சைகள், மற்றும் அரசியல் கட்சி வேட்பாளர்களின் ஏஜெண்ட்கள் வந்திருந்தனர்.
அவர்கள் முன்னிலையில் கலெக்டர் வேட்புமனுக்கள் பரிசீலனை தொடங்கினார். முதலில் அரசியல் கட்சிகளின் வேட்புமனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அதிமுக வேட்பாளர் கருப்பையாவின் மனுவை பரிசீலித்தபோது, சிலர் ஆட்சேபம் தெரிவித்தனர். ஆனால் கலெக்டர் அதை ஏற்கவில்லை. தொடர்ந்து பரிசீலனை நடந்து வருகிறது.
மத்திய சென்னை பாஜக வேட்பாளர் வினோஜ் பி. செல்வம் வேட்புமனுவை சரியாக நிரப்பவில்லை. அதனை தேர்தல் அதிகாரி ஏற்றுக்கொண்டார். இதற்கு திமுக எதிர்ப்பு தெரி்வித்து மனுவை நிராகரிக்க வேண்டும் என கோரினர். அதை அதிகாரி ஏற்கவில்லை. மனு ஏற்கப்பட்டது-
சேலம் திமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் செல்வகணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டது. அவருக்கு 2 இடத்தில் வாக்குரிமை இருப்பதாக புகார் கூறப்பட்டதால் மனு நிறுத்தி வைக்கப்பட்டது. சேலம் மேற்கு, வடக்கு சட்டமன்ற தொகுதிகளில் அவருக்கு வாக்கு இருப்பதாக கூறப்பட்டது.இது தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்ட பிறகு தான் மனுவின் நிலைமை குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என தேர்தல் நடத்தும் அதிகாரியான கலெக்டர் அறிவித்தார்.
திருச்சியில் மதிமுக வேட்பாளர் துரை வைகோ மனு ஏற்கப்பட்டது. தமிழ்நாட்டில் மற்ற இடங்களில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் மனுக்கள் ஏற்கப்பட்டது.