ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் நாளை நடைபெறவுள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு மரியாதை செலுத்த உள்ளார்.
இதனையடுத்து அதிமுக மதுரை மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தலைமையில் மதுரை கோரிப்பாளையம் பகுதியில் இருக்கக்கூடிய மதுரை மாநகர் மாவட்ட கழக அதிமுக அலுவலகத்தில் நேற்று மாலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு கூறியதாவது:
விஜய்யின் படங்கள் போலவே அவருடைய கட்சி மாநாடு தொடக்கம் நன்றாக உள்ளதுபோக போக தான் கட்சியின் செயல்பாடுகள் தெரிய வரும்.விஜய்யின் மாநாட்டால் அவரது கட்சி தொண்டர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்து உள்ளனர்
அதிமுகவை எம்.ஜி.ஆர் தொடங்கும் போது கலைஞர் கேலி, கிண்டல் செய்தார்.அதிமுக மிகப்பெரிய அடக்குமுறைகளை எதிர்க் கொண்டு வந்துள்ளது, சட்டமன்ற தேர்தல் கூட்டணிக்கு இன்னும் காலங்கள் உள்ளன
ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம்.விஜய்க்கு துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து சொல்லி இருக்கிறார். விஜய்க்கு எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து சொன்னதை வைத்து கூட்டணி என முடிச்சு போட வேண்டாம்.
தவெக கொள்கைகளை நாங்கள் ஏற்றுக் கொண்டால் எதற்கு அதிமுகவில் இருக்க வேண்டும்.
நாங்களும் அவர் கட்சியில் சேர்ந்து விடலாமே?, குழந்தை பிறந்து அம்மா என அழைப்பது போல விஜய் மாநாடு நடைபெற்றுள்ளது.எப்படி இருக்கு என போக போக பார்ப்போம்.
நடிகர் கமல் மாதிரி இல்லாமல் விஜய் மாநாட்டில் நன்றாக மிக தெளிவாக பேசினார்.
கமல் கட்சி தொடங்கும்போது டார்ச் லைட் வைத்திருந்தார், இப்போது டார்ச் லைட் மட்டுமே உள்ளது. ‘அதில் பேட்டரியை காணோம்.
திராவிட மாடல் ஆட்சியில் உள்ளவர்கள் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என குரல் எழுப்பி வருகிறார்கள்.
எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியின் போது எத்தனையோ புயல்களை தாண்டியும், 25,000 போராட்டங்களை தாண்டியும் மக்களுக்கான ஆட்சியை கொடுத்தார்.
திமுகவுக்கு எதிராக அதிமுக செயல்படுவது போல விஜய்யும் செயல்படுகிறார்திராவிட மாடல் ஆட்சி குறித்து நாங்கள் சொன்னதை தான் விஜய் சொல்கிறார்
அதிமுகவின் குரலாக தான் விஜய் ஒலித்து இருக்கிறார், போக போக தான் விஜய் கட்சியின் செயல்பாடுகள் தெரியும்.