Skip to content
Home » புலியின் வாயைப் பிடிக்காமல் வாலைப் பிடித்தவர் செல்லூர் ராஜூ… அமைச்சர் பேச்சால் சிரிப்பலை….

புலியின் வாயைப் பிடிக்காமல் வாலைப் பிடித்தவர் செல்லூர் ராஜூ… அமைச்சர் பேச்சால் சிரிப்பலை….

  • by Senthil

தமிழக சட்டப்பேரவையில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. 2023-24ம் ஆண்டுக்கான நிதி அறிக்கையை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனும், வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வமும் தாக்கல் செய்தனர். இதனை தொடர்ந்து சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்றைய வினாக்கள் விடைகள் நேரத்தில், மதுரையில் எந்த தொழிலும் இல்லாத நிலையில் மெட்ரோ வந்து என்ன பயன் எனவும், தொழில்பேட்டை தொடங்குங்கள் ஆஹா ஓஹோ எனப் பாராட்டப்படும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பினார்.

இதற்கு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்து கூறியதாவது:- மதுரை மக்கள் மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களே அண்ணனை பார்த்து ஆஹா ஓஹோ என்றனர்.மதுரையில் மாடு தான் பிடிப்பார்கள் ஆனால் அண்ணன் செல்லூர் ராஜூ புலிவாலை

புலி வாலைப் பிடித்த செல்லூர் ராஜு' - அமைச்சர் தங்கம் தென்னரசு கிண்டல்: கேட்டு ரசித்த முதல்வர் ஸ்டாலின் | mk stalin laughed after Thangam Tennarasu speech about Sellur ...

பிடித்து படம் வெளியிட்டுள்ளார். அதிலும் ரொம்ப விவரமாக அண்ணன் புலியின் வாயை பிடிக்காமல் வாலை பிடித்துள்ளதில் தெளிவாக தெரிகிறது என கூறினார். இதனால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது. தொடர்ந்து பேசிய அவர், மதுரையில் 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டைடல் பார்க் அமைக்க முதலமைச்சர் அறிவித்துள்ளதோடு, சிப்காட் தொழிற்சாலை வருவதற்கும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. மக்களிடத்தில் சமச்சீரான தொழில் வளர்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் இருக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார் என்றும், அதிகமான முதலீடுகள் தென் மாவட்டங்களை நோக்கி வர தொடங்கியுள்ளதால், மதுரையில் நிச்சயமாக புதிய தொழில் பேட்டைகள் தொடங்கப்படும் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!