கரூர் மாவட்டம் க.பரமத்தி பகுதியில் ஏராளமான கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அனுமதி இன்றி பல்வேறு இடங்களில் பெரிய மற்றும் சிறிய அளவிலான சாதாரண வகை ஜல்லிக்கற்கள் அனுமதி இன்றி கடத்தி வருவதாக கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில், க.பரமத்தி அருகே பஞ்சபிச்சகுட்டை என்ற இடத்தில் உதவி புவியியல் சுரங்கத் துறை அதிகாரி தலைமையிலான குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அனுமதி இன்றியும், நடை சீட்டு இல்லாமல் 2 யூனிட் சாதாரண கற்கள் எடுத்து வந்த லாரியை பறிமுதல் செய்து, லாரியை ஓட்டி வந்த ராஜ் (27) என்ற ஓட்டுனரை க.பரமத்தி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கனிமவளத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் க.பரமத்தி காவல் நிலைய போலீசார் அனுமதி இன்றி கற்களை ஏற்றி வந்த டிப்பர் லாரியை காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்து, ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.