மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா இலுப்பூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோயிலின் தீமிதி திருவிழா விமரிசையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அம்மனுக்கு கிராமமக்கள் அபிஷேக ஆராதனையுடன் அம்மன் வீதி உலா நடைபெற்றன. சங்கரன்பந்தல் வீரசோழன் ஆற்றில் இருந்து மேள வாத்தியங்கள் முழங்க சக்தி கரகம், அலகு காவடி, பால் காவடி புறப்பட்டது. விரதமிருந்த பக்தர்கள் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். தொடர்ந்து கோயில் முன்பு அமைக்கப்பட்ட பூக்குழியில் சக்திகரகம் இறங்கியது. பின்னர் மஞ்சள் உடை உடுத்தி காப்பு கட்டி விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
மயிலாடுதுறை… சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா
- by Authour
