மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே கொள்ளிடம் பகுதியில், தைக்கால் கடைதெரு உள்ளது. லட்சக்கணக்கான பிரம்பு பொருட்களின் விற்பனை கிடங்காக, காட்சிதரும் ஊர், தைக்கால். அதே பகுதியைச் சேர்ந்த, ரகமத்துல்லா, பிரம்பு பொருள் தயாரிப்பு மற்றும் விற்பனைக் கடை நடத்தி வருகிறார். இந்த கடையில், அதிகாலை 3 மணி அளவில், கடைக்குள் இருந்த, மின் வயரிலிருந்து மின்சாரம் கசிந்து, தீ பிடிக்க ஆரம்பித்தது.அதனைத் தொடர்ந்து கடைக்குள், பிரம்பால் செய்யப்பட்டு வைத்திருந்த கட்டில், சோபா, ஊஞ்சல், நாற்காலி மற்றும் குழந்தைகளுக்கான, கலைநயமிக்க விளையாட்டு பொருட்கள் ,உள்ளிட்ட அனைத்து பிரம்பு பொருட்களும் தீ பிடித்து எரிய ஆரம்பித்தது.தகவல் அறிந்த, சீர்காழி தீயணைப்பு படை வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இதில் பிரம்பினாலான அனைத்து பொருள்களும், எரிந்து சாம்பல் ஆனது. தீ விபத்தில் , ரூ 40 லட்சம் மதிப்பிலான பிரம்பு பொருட்கள், எரிந்து சாம்பலாகி விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கொள்ளிடம் போலீசார், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சீர்காழி அருகே திடீர் தீ ….ரூ.40 லட்சம் மதிப்பிலான பிரம்பு பொருட்கள் எரிந்து சாம்பல்….
- by Authour