மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த பழையார் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் குரல் மணி 50 இவர் தனக்கு சொந்தமான பைபர் படையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுக்கா கிள்ளை பில்லுமேடு பகுதியைச் சேர்ந்த செல்வமணி மகன் செந்தில் வீரன் 48 என்பவருடன் நேற்று இரவு 11 மணிக்கு கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளார். பழையார் முகத்துவாரம் அருகே கடலில் மீன் பிடித்த போது எதிர்பாராத விதமாக அலையில் சிக்கி படகு கவிழ்ந்து உள்ளது. இதில் செந்தில் வீரன் கடலில் மூழ்கியுள்ளார் நீந்தி கரை திரும்பிய குரல் மணி அளித்த தகவலின் பெயரில் மீனவர்கள் கடலுக்குள் சென்று செந்தில் வீரனை தேடினர். இந்நிலையில் செந்தில் வீரன் இறந்த நிலையில் அவரது உடல் கொடியம்பாளையம் கடற்கரையில் ஒதுங்கியுள்ளது. தகவல் அறிந்த கடற்கரை காவல் நிலைய போலீசார் செந்தில் வீரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சீர்காழி அருகே கடலில் படகு கவிழ்ந்து மீனவர் பலி…. விசாரணை..
- by Authour
