Skip to content

சீர்காழி அருகே சாலை விபத்தில் 2 கல்லூரி மாணவர்கள் பலி.

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன் மகன் புவனேஷ் (23).
சிதம்பரம் கவரப்பட்டு பகுதியை சேர்ந்த பாலமுருகன் மகன் செல்வம் (20) ஆகிய இருவரும் நண்பர்கள்.
புத்தூர் அரசு கலை கல்லூரியில் பிபிஏ மூன்றாம் ஆண்டு படித்து வந்தனர். இந்நிலையில் இருவரும் இன்று காலை கல்லூரிக்கு பைக்கில் வந்து கொண்டிருந்த போது புத்தூர் அரசு தொழில்நுட்பக் கல்லூரியை ஒட்டி செல்லும் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வந்த லாரி மோதியதில் செல்வம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயத்துடன் புவனேஷ் சீர்காழி அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இறந்துவிட்டார். இருவரின் உடலும் சீர்காழி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.இந்த விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

error: Content is protected !!