நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, நடிகை விஜயலட்சுமி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். இது தொடர்பாக நீதிபதி முன் விஜயலட்சுமி வாக்குமூலம் அளித்தார். இந்த நிலையில் 12ம் தேதி(இன்று) வளசரவாக்கம் போலீசில் நேரில் ஆஜராக சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
அதன் பேரில் இன்று சீமானுக்கு பதில் அவரது வழக்கறிஞர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி, போலீசாரிடம், வழக்கு நிலவரம் குறித்து விசாரித்தார். 30 நிமிடத்திற்கு பிறகு வெளியே வந்த வழக்கறிஞர் நிருபர்களிடம் கூறியதாவது:
2011ல் முடித்து வைக்கப்பட்ட இந்த வழக்கு, அதன் தொடர்ச்சியாக நடைபெறுகிறதா,எதன் அடிப்படையில் விசாரணை இப்போது நடக்கிறது என கேட்டோம். போலீசார் அளிக்கும் தகவலின் அடிப்படையில் எங்களது அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும். அனுமானத்தின் அடிப்படையில் பதில் அளிக்க நான் தயாராக இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.