நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பியிருந்த நிலையில், விசாரணைக்காக மனைவியுடன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜரானார். விசாரணை முடிந்த நிலையில், சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது; நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக விசாரணைக்கு மனைவியுடன் ஆஜரானார் சீமான் “இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு நானே விருப்பப்பட்டு தான் வந்தேன். என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்துள்ளேன். சிலரின் தூண்டுதலின் பேரில் தான் என் மீது இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. என்னுடைய வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியாமல் இதை செய்கிறார்கள். என் பெயரை களங்கம் ஏற்படுத்தவே பெண்ணுடன் தொடர்புப்படுத்தி பேசுகிறார்கள். இந்த பெண்களால் 13 ஆண்டுகள் நான் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளேன். 8 முறை கருக்கலைப்பு என்பது நகைச்சுவையாக உள்ளது. சமூக முன்னேற்றத்திற்காக பாடுபடுபவர்களை இப்படி செய்யக்கூடாது. என் மீது களங்கம் ஏற்படுத்த முயற்சித்த வீரலட்சுமி பொது மன்னிப்பு கேட்கவேண்டும்.” இவ்வாறு அவர் பேசினார்.