Skip to content
Home » சீமானுக்கு நடிகர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து…

சீமானுக்கு நடிகர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து…

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தனது 57 வது பிறந்தநாளை கொண்டாடுகிறா.  சிவகங்கை மாவட்டம் அரனையூர் என்ற கிராமத்தில் 1966 ஆம் ஆண்டு பிறந்த சீமான் இளங்கலை பொருளாதாரம் பட்டப்படிப்பை முடித்தவர் . இவர் 1991 ஆம் ஆண்டு சினிமாவின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக சென்னைக்கு வந்தார் . சினிமாவில் பாஞ்சாலங்குறிச்சி, இனியவளே, வீரநடை, தம்பி மற்றும் வாழ்த்துகள் போன்ற திரைப்படங்களை இவர் இயக்கினார் . பின்னர் மாயாண்டி குடும்பத்தார் , பள்ளிக்கூடம் உள்ளிட்ட திரைப்படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் தனி இடம் பிடித்தார். இதைத்தொடர்ந்து அரசியல் பக்கம் திரும்பிய சீமான் நாம் தமிழர் கட்சி என்ற கட்சியை தொடங்கினார். தொடர்ந்து சட்டப்பேரவை தேர்தல்களிலும் நாடாளுமன்ற தேர்தலிலும் தனியாக நின்று களம் கண்டு வருகிறார்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, நடிகர் விஜய் தொலைபேசி மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். முன்னதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல் ஹாசன் உள்ளிட்டோர் வாழ்த்து கூறியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *