Skip to content

சிரிக்க சிரிக்க பேசுபவன் என நினைக்காதீங்க…..சீமான் ஆவேசம்…

  • by Authour

சென்னையில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- குருவி வெடி, லெட்சுமி வெடி போன்று இரண்டு வெடிகளை வைத்து மலையை தகர்க்கலாம் என நினைக்கிறார்கள். தற்போது இரண்டு முறை சம்மன் அனுப்பிய காவல்துறை 13 ஆண்டுகளாக என்ன செய்தது?. எல்லா வினைகளுக்கும் எதிர்வினை உண்டு. வீரலட்சுமி என்பது யார்?. என் மீதான குற்றச்சாட்டுக்கான ஆதாரத்தை காவல்துறையும் கேட்கவில்லை, பத்திரிகையாளர்களும் கேட்கவில்லை.

ஜூனியர் நடிகைக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்து செட்டில்மென்ட் செய்ததாக கூறியுள்ளார். அந்த ஜூனியர் நடிகை யார் தெரியுமா? வீரலட்சுமி தான். என்னை ஒருமையில் பேசுகிறார்கள். ஜனநாயகவாதியாக இருப்பதுதான் எனக்கு பிரச்சினை. நான் யார் என்று தெரியுமா? எனக்கு இன்னொரு முகம் இருக்கிறது. இந்த முகத்தையே பார்க்க முடியவில்லையே. அப்போது வேறு முகத்தை பார்க்க முடியுமா?. அதிகாரத்தில் இருப்பது யார்?. வீரலட்சுமியை பேசவிட்டு வேடிக்கை பார்ப்பது யார்?. எப்போது வந்தாலும் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கலாம். ஊடகங்களை சந்திக்கலாம்.

சீமானை பற்றி பேசினால்… சீமான் பானிபூரி விற்கிறவன் மாதிரி… நான் யார் தெரியுமா? நான் ஒரு லட்சம் துப்பாக்கிகளை கடந்த என் தலைவனை பார்த்து வந்தவன். எனக்கு உயிரும் என்றுதான், …ம் ஒன்றுதான்…. எதற்கும் பயப்படமாட்டேன். ஜெயில்ல போடுவீர்கள். அப்புறம் வெளியில் விடுவீர்கள்தானே? அப்போது உங்களை விட்டுவிடுவேனா என்ன… வீரலட்சுமி, விஜயலட்சுமி என இரண்டு லட்சுமியை ஏன் அனுப்பி கொண்டிருக்கிறீர்கள். எனது பிறப்பிலும், ரத்தத்திலும் வீரம் இருக்கிறது. நான் தலைவராக ஏற்றுக் கொண்டவர் வீரமே உருவமாக இருந்தவர். அவரது மகன் நான்… எனக்கு வீரமெல்லாம் இருக்கு…வேணாம். என்னிடம் இல்லாதது பணம்தான். இரண்டு தனலட்சுமி, தான்யலட்சுமியை கொடு.

அவதூறால் அழிந்து போகிறவன் நான் அல்ல…. நான் கேடுகெட்ட ரவுடி பையன். ஸ்கெட்ச் போட்டு தூக்குவேன் என்கிறார்கள். இந்த பேனாவை தூக்க முடியுமா?. சிரிக்க சிரிக்க பேசுபவன் என்று நினைக்க வேண்டாம்… நான் ரொம்ப சீரியஸான ஆள். கட்சியாவது? …ஆவது என வெட்டி எறிந்து போய்க்கொண்டே இருப்பேன். பெண்களுக்கு எதிராக அநீதி நடந்தபோது எங்கே போனார்கள். நாங்கள்தானே போராடினோம். எனக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது; எனக்கென்று ஒரு கூட்டம் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!