Skip to content
Home » 2026-ல் விஜய்யுடன் கூட்டணி இல்லை.. தனித்தே போட்டி” என சீமான் திடீர் அறிவிப்பு..

2026-ல் விஜய்யுடன் கூட்டணி இல்லை.. தனித்தே போட்டி” என சீமான் திடீர் அறிவிப்பு..

தூத்துக்குடியில் நேற்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் 2026 சட்டப்பேரவை தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவீர்களா? என நிருபர்கள் கேட்டதற்கு ” 2026 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். தற்போது 60 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளேன். மற்ற தொகுதி வேட்பாளர்களையும் தேர்வு செய்து வருகிறேன்” என கூறினார். கடந்த சில வருடங்களாகவே நடிகர் விஜய்க்கு சீமான் ஆதரவு தெரிவித்து கருத்துக்களை கூறி வருகிறார். மேலும் விஜய் கட்சி ஆரம்பித்தால் அவருடன் கண்டிப்பாக கூட்டணி வைப்பேன் எனவும் விஜய் அழைத்தால் நடத்தும் மாநாட்டில் கலந்து கொண்டுபேசுவேன் எனவும் சீமான் கூறிவந்தார்.  இந்த நிலையில் நேற்று அவர் தனித்து போட்டி என அறிவித்துள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!