நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரை வாபஸ் பெற்றார். சென்னை, வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷனிற்கு நேற்றிவு வந்த விஜயலட்சுமி சீமான் மீதான புகாரை வாபஸ் பெறுவதாக கூறி எழுத்துப்பூர்வமான மனு ஒன்றை அளித்தார். இந்த புகாரை வாபஸ் பெற யாரும் கட்டாயப்படுத்தவில்லை என கூறிய அவர் புகார் மீதான நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை என கண்ணீருடன் கூறினார். தனது புகார் தொடர்பாக போலீசாரின் நடவடிக்கை வேகமாக இல்லை எனவும், தனி ஒருவராக போராட முடியவில்லை என குறிப்பிட்டார். சீமானை எதிர்கொள்ள எனக்கு போதிய ஆதரவு யாரிடமும் கிடைக்கவில்லை என்பதால் வேறுவழியில்லாமல் தனது புகாரை வாபஸ் பெறுவதாக கூறிய நடிகை விஜயலட்சுமி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.