தமிழ்நாடு அரசு உத்தரவின்படியும், அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லா அறிவுறுத்தலின் பேரில்,மாவட்ட காவல்துறையினர் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பொருட்களான புகையிலை, பான்மசாலா விற்பனை குறித்து தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தா.பழூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 32 கடைகளில், காவல் ஆய்வாளர் இராஜேந்திரன் தலைமையிலான காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் பான் மசாலா போன்றவற்றை கடைகளில் வைத்து விற்பனை செய்த 5 கடைகளை சேர்ந்தவர்களான திருநாவுக்கரசு (2 பண்டல் ஹான்ஸ், விமல் பாக்கு 65 பாக்கெட்)
விஜய் (ஹான்ஸ் 12 பாக்கெட்,விமல்பாக்கு 15 பாக்கெட்) நூர்முகமது(ஹான்ஸ் 11 பண்டல்,கூல் லீப் 5 பாக்கெட், விமல்பாக்கு 15 பாக்கெட் ஆகிய 3-நபர்களையும், கலியமூர்த்தி (ஹான்ஸ் 1 பண்டல்),
மகேஷ் குமார் (கூல் லீப் 7பண்டல் 4 பாக்கெட்) ஆகிய இரண்டு நபர்களையும் தா.பழூர் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து தா.பழூர் காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் அறிக்கையின் பேரில்,உணவு பாதுகாப்பு துறையினரை வரவழைத்து, உணவு பாதுகாப்பு அலுவலர் மரு.கு.வரலட்சுமி தலைமையில் 5-கடைகளில் 2-கடைகளுக்கு அபராதம் விதித்தும், தொடர்ந்து இது போன்ற குற்றம் புரிந்தமைக்காக 3-கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.