தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “எங்கள் கட்சி கலை, கலாச்சாரம், பண்பாடு அனைத்தையும் உள்வாங்கிய கட்சி. தோழமையோடு இருக்கிறோம். கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துகிறோம். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் கடந்த 2014-ல் தனியாக போட்டியிட்டோம்.
காங்கிரஸ் எந்த காலத்திலும் யாருக்காகவும் சீட்டுக்காக ஏங்கியதில்லை. சீட்டுக்காக யாரிடமும் கெஞ்ச மாட்டோம். தனியாக போட்டியிட வேண்டுமா என்பதை தலைமைதான் முடிவு செய்யும்.தி.மு.க.வும் காங்கிரசும் உண்மையான தோழமையுடன் இருக்கிறது. திமுக தலைவரும் ராகுல் காந்தியும் அண்ணன், தம்பி போல பழகி வருகின்றனர்.
தி.மு.க – காங்கிரஸ் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை வெளிப்படை தன்மையுடன் நடைபெற்று வருகிறது. தி.மு.க. உடன் பேசிக்கொண்டு தான் இருக்கிறோம். நல்ல முடிவு எட்டப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.