திருச்சி 29 வது வார்டு ஆழ்வார் தோப்பு பகுதியில் சாலை அமைக்கப்பட்டது. இது சரியான முறையில் அமைக்கப்படவில்லை , அதை சரியாக அமைக்க உத்தரவிடவேண்டும் என மேயர் அன்பழகனிடம் எஸ்டிபிஐ கட்சி புகார் செய்தது. அதைத்தொடர்ந்து நேற்று அந்த பகுதியில் சாலை அமைக்கப்பட்டது. அதை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் 29வது மாமன்ற உறுப்பினர் அழைப்பின் பேரில் SDPI கட்சி திருச்சி மேற்கு தொகுதி தலைவர் சையது முஸ்தபா தலைமையில் எஸ்டிபிஐ கட்சியினரும் பார்வையிட்டனர்.. சரியான முறையில் சாலையை அமைத்து தருகிறோம் என்று மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மாமன்ற உறுப்பினர் உறுதி அளித்தனர். இந்நிகழ்வில் கட்சியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் பக்ருதீன்,மேற்கு தொகுதி துணை தலைவர் K.முஹம்மது சலீம்,தொண்டரணி தலைவர் முகமது ஆரிப்,சமூக ஊடக அணி தலைவர் உபைதூர் ரஹ்மான்,29 வது வார்டு ஆழ்வார் தோப்பு மற்றும் அண்ட கொண்டான் கிளை நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.